இந்த பூவுலகில் மிகவும் வேகமானது மனோவேகமும், வாயுவேகமும் ஆகும். அந்த மனதின் வேகத்தை காட்டிலும் மிக வேகமாக இயங்கும் வாயுவின் புத்திரர் – ஸ்ரீ ஆஞ்சநேயர், மார்கழி மாதத்தில் வரும் அமாவாசையில் அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழும் மூலநட்சத்திரத்தில் அவதரித்தார்.

சவாலாலான நேரங்களில் நாம் அழைத்ததும் ஓடிவந்து ரட்சிப்பவர் ஸ்ரீ ராம பக்த ஹனுமான். ராம நாமத்தை கூறுவதன் வாயிலாகவும், ஹனுமன் சாலிசா பாராயணம் செய்வதன் மூலமும் ஸ்ரீ மாருதியின் பூரண அருளை பெறலாம்.

ராம நாமம் ஒலிக்கும் இடத்தில் குடிக்கொண்டிருக்கும் ஹனுமன் – அறிவு, உடல் வலிமை, ஆரோக்யம், புகழ், வீரம், அன்பு ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர்.

அவர் அவதரித்த இந்த நன்னாளன்று, இராமாயணத்தில் உள்ள ஏழு காண்டங்களையும் உள்ளடக்கிய ஏக்க ஸ்லோக ராமாயணத்தை கேட்போம்! அருள் பெறுவோம்!!

Hear and Chant Eka Sloka Ramayanam: https://youtu.be/njZGoXDYhaw

அதௌ ராம தபோ வனாதி கமனம் ஹத்துவா ம்ரிகம் காஞ்சனம்
வைதேகி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரிவ சம்பாஷணம்
வாலி நிர்தலனம் சமுதிரதரணம் லங்கா புரிதாஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனணம் எதாதி ராமாயணம்

ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஹனுமான்!!

3 COMMENTS

  1. … [Trackback]

    […] Read More on that Topic: bhakthimovement.com/2021/01/11/ஸ்ரீ-ஹனுமன்-ஜெயந்தி-ஜனவர/ […]