வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் என தழைத்தோங்கிக் இருக்கும் புண்ணிய லோகம் நம் பூலோகம். இங்கு வருடத்தில் உள்ள 12 மாதங்களில், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயனம் எனவும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தக்ஷிணாயனம் எனவும் பிரித்து அருளியிருக்கிறார்கள் ரிஷிகள்.
தேவர்களுக்கு, உத்தராயன காலம் பகல் பொழுது எனவும், தக்ஷிணாயன காலம் இரவுப் பொழுது ஆகும்.
தக்ஷிணாயன காலம் முடிந்து உத்தராயன காலம் துவங்குகிற இன்றைய தை மாத பிறப்பில், அனுதினமும் நாம் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ள சூரியனை போற்றி பொங்கல் வைத்து மகிழ்வதே தை திருநாளின் நோக்கம்.
Hear and Chant Powerful Sun Mantra: https://youtu.be/GL8TA_6yeTY
பொங்கல் வைக்க நல்ல நேரம்:
தை மாதம் முதல் தேதி, ஜனவரி 14, 2021, வியாழக்கிழமை: காலை 7.30 மணி முதல் – 9.00 மணி வரை அல்லது 10:30 மணி முதல் – 12:00 மணி வரை
பொங்கல் தின சிறப்புகளை பற்றியும், அதன் பின் உள்ள ஆன்மீகத்தையும், அறிவியலை பற்றியும் நம் ஆன்மீக குரு கோவை திருமதி. விஜய நேதாஜி அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்! ஞானம் பெறுங்கள்!!
ஞாயிறு போற்றுவோம்! ஞாயிறு போற்றுவோம்!!
Subscribe to our Powerful Mantras YouTube Channel: https://youtube.com/c/Ekasvara