தை மாதத்தில் வரும் பௌர்ணமியுடன் பூச நட்சத்திரம் கூடி வரும் நாளே தைப்பூச திருநாளாகும்.
தைப்பூசம் தமிழ் கடவுள் முருகப்பெருமானிற்கு உகந்த நாள் ஆகும். தேவார பதிகங்களில் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் தைப்பூசம் கொண்டாடபட்டதை குறித்த சான்றுகள் உள்ளன.
Interesting Facts about Thai Poosam:
தைப்பூசம் தமிழகம் மட்டுல்லாது இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் என தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
பழனியில், தைப்பூசத்தன்று முருகன் அசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக வருடாவருடம் கொண்டாடப்படுகிறது.
தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமாகும். ஆதலால், தைப்பூசம் நாளில் குரு பகவானை வழிபடுவது மிகுந்த பலனைத் தரும்.
Click and Hear Powerful Guru Mantra
ராமலிங்க வள்ளலார் அருட்பெரும் ஜோதியில் இரண்டறக் கலந்தது, ஒரு தைப்பூச நன்னாளில் தான். அதனால் வடலூரில், வருடந்தோறும் தைப்பூசத் திருநாளின் போது, சிறப்பு பூஜைகளும் ஜோதி தரிசன வழிபாடும் விமரிசையாக நடைபெறுகிறது.
தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
முருகப்பெருமானிற்காக இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக போற்றப்படுகிறது.
தைப்பூசம் நாளில் தான் முருகன், வள்ளியை மணம் புரிந்து கொண்டார்.
… [Trackback]
[…] Read More on that Topic: bhakthimovement.com/2021/01/28/தொட்டதெல்லாம்-துலங்கும்/ […]